முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, பிப். 29 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் மார்ச் 1 அன்று கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள், மரம் நடுதல், இரத்தம் தானம் செய்தல் கழக கொடி ஏற்றுதல் என பொது மக்களுக்கு பயன்படும் வகையில் மாதம் முழுவதும் எழுச்சியாக கொண்ட வேண்டும் .
மேலும் பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகங்களில் கழக இருவண்ண கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பின்னர் மாவட்ட கழகத்தால் அறிவிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர்கள் அனைத்து வட்ட, வார்டு, ஊராட்சிகளிலும் கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கிட ஏதுவாக மேற்க்கண்டபடி நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயளாலர்கள் ஒப்புதலுடன் வட்ட, வார்டு, கிளை கழக செயளாலர்கள் நிகழ்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.