பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து : கணவன், மனைவி உயிரிழப்பு

0 291
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (63). இவரது மனைவி மலர்விழி (50) மற்றும் மகன், மகள் உள்பட 5 பேர் ஒரு காரில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்று சாமி கும்பிட்டு விட்டு பின்பு அங்கிருந்து மண்ணச்சநல்லூர் நோக்கி சென்றனர். மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி முக்கன்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்து போனதால் காரில் சென்ற 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இருப்பினும் அர்ச்சுணன்இ மலர்விழி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிழந்தனர். இதையடுத்து இறந்தவரின் உடலை துவரங்குறிச்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.