நர்சுகள் பொது நலச் சங்க செயற்குழு – பொது குழு கூட்டம்
திருச்சி, மார்ச் 18 திருச்சியில் நர்சுகள் பொது நலச் சங்கம் செயற்குழு மற்றும் பொது குழு கூட்டம்
சீனிவாசாமண்டபம் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் சங்கத்தின் உறுப்பினர்கள்
கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்ளவும், இணைந்து செயல்படவும், பல சங்கங்கள் இணைவதற்கு வழிவகுக்கவும் ஏற்கனவே நர்சுகள் பொதுநல சங்கம் கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியின் பலனாக 6க்கும் மேற்பட்ட சங்கங்கள் நர்சுகள் பொதுநல சங்கத்தில் இணைந்த பின், நமது துறை அதிகாரிகளை சந்தித்து பேசியதில் கடந்த 14.11.23 அன்று அனைத்து சங்கங்களையும் அழைத்து சுகாதார துறை அரசு சார்பில் முதன்மை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீதும் நர்சுகள் பொதுநல சங்கம் இன்று எடுக்கும் MINUTES OF MEETING மூலம் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் தீர்மான விவாதங்கள் பின்வருமாறு
1. PROMOTION (பதவி உயர்வு) பறிபோகும் அவலநிலை குறித்து,
2. GR1 மற்றும் GR2 PROMOTION (செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-1, மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை -2) பாதிப்புகள்,
3. CNL (பனி மூப்பு பட்டியல்) உள்ள குளறுபடிகள் களைவது குறித்து
4. TRANSFER பணி இடமாற்றத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் களைவது குறித்து
5. SENIORITY பணி மூப்பு பட்டியலில் உள்ள குழப்பங்கள் தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதம்
6. (DIGNITY) செவிலியர்கள் கண்ணியம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் (UNIFORM ) பணி சீருடை குறித்த பிரச்சனைகள்
7. SALARY, ALLOWANCE, சம்பளம் சார்ந்த மற்றும் செவிலியர் படிகள் குறித்து உட்பட பணிநிலை சார்ந்த பல்வேறு குழப்பங்கள் தீர்ப்பது குறித்து
எம் ஆர் பி செவிலியர்கள் பணி நிரந்தரம் குறித்தும், பயிற்சி முடித்த செவிலியர்கள் 10 ஆண்டு கழித்து பணி கிடைக்கும் அப்பணியானது பென்ஷன் ஸ்கீம்க்கு கிடைக்காமல் போனது குறித்து உள்ள இடர்பாடுகள் மற்றும் பல்வேறு நல திட்ட பணிகள் மூலம் அரசால் நியமிக்கப்பட்ட செவிலியர்களில் உள்ள பனி மூப்பு சார்ந்த பிரச்சனைகள் களையவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் கௌரவ செயலாளர். திருமதி லீலாவதி அம்மையார் அவர்கள் மற்றும் கௌரவ தலைவர் திருமதி அறிவுக்கண் அம்மையார் அவர்கள் மற்றும் நர்சுகள் பொது நல சங்கத்தின் மாநில செயலாளர் கோபால் தேவி மற்றும் மாநிலத் தலைவர் சந்திரகலா மற்றும் மாநில பொருளாளர் மா .கோபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.