ஸ்ரீ சாய் நர்சரி & பிரைமரி பள்ளி ஆண்டு விழா

0 235
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  திருச்சி ஸ்ரீ சாய் நர்சரி பிரைமரி பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள்.

திருச்சி ஸ்ரீ சாய் நர்சரி & பிரைமரி பள்ளியின் 30வது ஆண்டு விழா தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் சாய்சரண் தலைமை தாங்கினார் பள்ளி முதல்வர் காயத்ரி, ஐஸ்வர்யா மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் வினோத்குமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் hyundai மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிர்வாகி ராம்குமார் மற்றும் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் ஹோல்டர் ஜெட்லி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகளான ஓடு உடைத்தல் தர்பூசணி உடைத்தால் செங்கல் உடைத்தல் மற்றும் யோகாசனம் , கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது இவ்விழாவில் மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.