இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு
திருச்சி, மார்ச் 21 துறையூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியில் வசிப்பவர் சேகர் இவரது மனைவி தனலட்சுமி சேகர் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் முசிறியில் நடைபெறும் உறவீனர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர் வளைகாப்பு முடிந்து மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி நாகலாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியது இதனால் தனலட்சுமி மற்றும் மனோகர் தூக்கி எறியப்பட்டு தலையில் அடிபட்டதால் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் கோயமுத்தூரை சேர்ந்த பூபதி என்பவர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது மேலும் காவல் துறையினர்
உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கணவன் மனைவி இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது