பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு

0 354
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  சமயபுரம் சுங்கச்சாவடியில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளருக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு மண்ணச்சநல்லூர் லால்குடி திமுக நிர்வாகிகள் இன்று காலை 10.30 மணியளவில் உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். நேற்று திமுக தலைவர் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை அறிவித்தார்.இதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மகன் அருண்நேரு வேட்பாளராக அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு வந்த பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் அருண்நேருவிற்கு சமயபுரம் சுங்கச்சாவடியில் லால்குடி மண்ணச்சநல்லூர் திமுக நிர்வாகிகள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.