முதலமைச்சர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, மார்ச் 22 2024-ஆம் ஆண்டிற்கான முதல் தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் சிறுகனூரிலிருந்து தொடங்குகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.03.2024) திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கிறார்.
அதற்கான பிரச்சார மேடையினை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.