தேர்தலுக்கு பின் தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் : முன்னாள் அமைச்சர் M.R.K.விஜயபாஸ்கர்

0 329
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும், தலைமைச் செயலாளர், டிஜிபி, பொருளாதார நிபுணர் என தலைசிறந்த அதிகாரிகளை நியமித்தார்கள். அப்போது இனிமேல் நமக்கு வழிஇல்லாமல் போய்விடுமோ என்று நினைத்தோம். ஆனால் எந்த அதிகாரிகளும் செயல்படமுடியவில்லை. குடும்பத்தில் 4 முதலமைச்சர்கள் என்று பேசிய அவர்,
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண் அதிகாரி உயிரிழந்த சம்பவத்தில் உடனே அப்போதைய முதல்வர் ஜெயலிலதா நடவடிக்கை எடுத்த நிலையில் 90 நாட்கள் சிறைசென்றார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனே நடவடிக்கைஎடுத்தார். ஆனால் இப்போது சிறையில் உள்ள ஒருவர் 8 மாதமாக சிறையிலேயே அமைச்சராக இருந்தார், மற்றொருவர் பதவி போய் மீண்டும் அமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். ஆனால் தி.மு.க திருட்டு தனம் செய்பவர்களுக்கு எல்லாம் புகழிடமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு பின் ஜாபர் சாதிக் வாய் திறந்தால் தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.