திருச்சியில் மாஸ் கிளிக் தொடக்க விழா

0 11
Stalin trichy visit

திருச்சி. ஆக.25 திருச்சியில் மாஸ் கிளிக் தொடக்க விழா – பனானா லீப் குழுமத்தின் உரிமையாளர் மனோகரன் பங்கேற்பு:-

திருச்சி மாஸ் கிளிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வாடிக்கையாளர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் ஒன்றிணைக்கும் “மாஸ் கிளிக்” தொடக்க விழா மற்றும் வணிகச் சான்றிதழ் மற்றும் பாராட்டு விருது வழங்கும் விழா திருச்சி ப்ளீஸ் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருச்சி மாஸ் கிளிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் முருகானந்தம் தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருச்சி பனானா லீப் குழுமத்தின் உரிமையாளர் மனோகரன் கொண்டு வணிகச் சான்றிதழ்கள் மற்றும் பாராட்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். விழாவில் கெளரவ விருந்தினர்களாக மாஸ் கிளிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஆலோசகரும், திருச்சி ராக்சிட்டி நிதி லிமிடெட் இயக்குநர் டாக்டர் சீனிவாசன்,

உறுப்பினர் வளர்ச்சி ரிட் 3000 மாவட்டச் செயலாளர் மற்றும், ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகி சுபா பிரபு, மற்றும் ஈரோடு கிளை DBS வங்கியின் தலைமை மேலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் விழாவில் மாஸ் கிளிக் வாடிக்கையாளர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.