ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

0 298
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25 நாடாளுமன்ற தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் பாண்டிச்சோரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் திருச்சி நவலூர்குட்டப்பட்டு, வண்ணாங்கோவில் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது:-

இன்றைய தினம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலே ஒரு மாபெரும் கூட்டணி. எதிரிலே திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே ஒரு கூட்டணி. பாரதிய ஜனதா தலைமையிலே ஒரு கூட்டணி. ஆனால், தேர்தலிலே போட்டி என்று வருகின்ற பொழுது அண்ணா.தி.மு.கவா, தி.மு.கவா என்பதை இந்த நாடு அறியும். தமிழ்நாடு மக்கள் அறிவார்கள். இன்றைக்கு பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோhpன் ஆசியோடு உங்களுடைய ஆதரவோடு, நம்முடைய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். விளாங்கோடு சட்டமன்ற தேர்தலிலே சகோதரி போட்டியிடுகின்றார். ஆக பாண்டிச்சேரியில் கழக பொறுப்பாளர் போட்டியிடுகின்றார். ஆக தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி, பாண்டிச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, விளாங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்று. அனைத்து இடங்களிலும் நமது கழக வேட்பாளர்களும், கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெற அரும்பாடு பட வேண்டும். எறும்பை போல, தேனிக்களைப் போல சுறுசுறுப்பாக பாடுபட்டு நம் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சியை நம்முடைய வேட்பாளராக கருதி அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். நம்முடைய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற எல்லா கட்சியுமே வெற்றி பெறுகின்ற சூழ்நிலையை நீங்கள் உருவாக்கி காட்ட வேண்டும்.
இன்றைய தினம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக 22-ம் தேதி, 23-ம் தேதி, 24-ம் தேதி ஆகிய மூன்று நாள் கூட்டங்களிலும் அவர் பேசியது ஒன்று பிரதமரை பற்றி விமர்சிப்பார். அதை பற்றி நமக்கு கவலை இல்லை. இன்னொன்று என்னைப் பற்றி விமர்சிப்பார். இது இரண்டையும் தவிர வேறு எதையுமே அவர் பேசுவதை காணோம். சரக்கு இருந்தால்தானே பேச முடியும். ஒண்ணுமே இல்லையே! பொம்மை முதலமைச்சர்! அவர்கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்! அவர் பேசுகிறார். தமிழ்நாட்டை நாம் குட்டிச்சுவராக்கிவிட்டோமாம். கெடுத்துவிட்டோமாம். ஸ்டாலின் அவர்களே பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மண்ணிலே பிறந்த காரணத்தினால் தமிழ்நாடு தப்பியது. உங்கள் குடும்பத்தில் இருந்து தப்பிக்க வைத்தவர் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதைக் காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, அம்மாவிற்கு பிறகு நான் நான்காண்டு ஆட்சியை சிறப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்தோம்.
இன்றைக்கும் எந்த இடத்திற்கு சென்றாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்று இன்றைக்கு மக்கள் பேசுகிறார்கள். உங்களுடைய மூன்று ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஒரு அலங்கோல ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. அப்படித்தான் மக்கள் பார்க்கின்றார்கள். இந்த மூன்றாண்டு காலத்தில் என்ன செய்தீர்கள்? நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள். ஒன்றும் காணோம். எதும் செஞ்சா தானே சொல்ல முடியும். ஆனால், அண்ணா தி.மு.கவில் எனக்கு முன்னால் பேசினார்களே. நமது கூட்டணி கட்சி தலைவர்கள் பத்தாண்டு காலம் அண்ணா.தி.மு.க ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்று புள்ளி விவரத்தோடு. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சரித்திரம் படைத்த அரசாங்கம் அண்ணா.தி.மு.க அரசாங்கம். ஆறு சட்டக் கல்லூரிகளை நாம் கொண்டு வந்தோம். பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் இப்படி எண்ணற்ற கல்லூரிகளை கொண்டு வந்து தமிழகம் கல்வியிலே சிறந்த மாநிலம் என்ற பெயரை கொண்டு வந்தோம் ஸ்டாலின் அவர்களே. நாங்களா தமிழ்நாட்டை கெடுத்தோம். கடந்த மூன்றாண்டு காலத்தில ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டுவர முடிந்ததா உங்களால் கொண்டுவர முடிந்ததா? எப்ப பார்த்தாலும் ஸ்டாலினுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஒத்த செங்கலை மூன்று வருசமா எடுத்து காட்டிகிட்டு இருக்கார். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று எங்களுடைய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா மத்தியிலே கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசாங்கம் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் கொண்டு வந்தது. நாங்களும் அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வேண்டும் என்று பலமுறை நாங்கள் மத்திய அரசு வற்புறுத்தி இருக்கிறோம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஒத்த செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை. அதனால் என்ன பயன். விளம்பரத்திற்காக செங்கலை தூக்கிக் காட்டுகிறார். சிறுபிட்ட மாத்தப் பார். கதைய மாத்து. செங்கலையே காட்டிகிட்டு இருக்க வேண்டாம். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு வந்தாங்க. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சி சேர்ந்த 38 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள். இந்த செங்கலை கொண்டு போய் அங்க காட்ட வேண்டியது தானே. 38 பேரும் நாடாளுமன்றத்தில் காட்டி நிதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம் இல்ல. அதைச் செய்ய தில்லு, திராணி, தெம்பு இல்ல. கேட்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். அதற்காகத்தான் தி.மு.க, திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டு மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வச்சிருக்காங்க. அங்க பெஞ்சு தேச்சுட்டு, வாய் மூடி மௌனம் சாதிச்சிட்டு, இங்க வந்து செங்கலை தூக்கிட்டு இருக்கீங்க. உண்மையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலே கட்ட வேண்டும். அதற்கு தேவையான நிதி வேண்டுமென்றால்? நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கின்ற அளவிற்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதற்கு தில்லு இல்ல. அதற்கு துணிவு இல்ல. திராணியில்ல. இங்கே வந்து செங்கலை புடிச்சுகிட்டு மக்கள்கிட்ட வித்தை காட்டிட்டு இருக்க. என்ன மக்கள் எல்லாம் குடுமி வச்சுக்கிட்டு இருக்காங்க என்று நினைக்கிறாயா, தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். இனி நீ சொல்றதெல்லாம் நம்புறதுக்கு தயாராக இல்லை. எனக்கு முன்னாலே சொன்னார்கள். கடந்த சட்டமன்ற தோ;தலில் கூட நீட் தேர்வை பற்றி சொன்னாங்களே. இப்போ கூட நீட் தேர்வை எடுத்துக்கிட்டாங்க. அந்த நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? உனக்கு தெம்பு! திராணி இருந்தா! நேரடியா நான் மைக் புடிக்கிறேன். நீ மைக்கை புடி. பேசு. யாருடைய ஆட்சியில் கொண்டு வந்தது. நான் காட்டுகிறேன் ஆதாரம் இருக்கு. நோட்டிவிக்கேஷன் எம்.சிஐ மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா 2010 டிசம்பர் 21ஆம் தேதி மத்திய அரசு இதழில் வெளியிட்டு இருக்காங்க. அப்போ மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி. தி.மு.க இணை அமைச்சராக நாமக்கல் காந்திசெல்வம் இருந்தார். அப்போ நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அப்பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. ரெண்டு பேரும் மாறி, மாறி பொய்யச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற கட்சி திராவிட மாடல் என்று சொல்லுகின்ற தி.மு.க கட்சி.
இதற்கு பரிகாரம் காண்பதற்காக அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவச் செல்வங்கள், ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், நகரத்தில் இருக்கின்ற சாதாரண அடிதட்டில் வாழுகின்ற அவர்களுடைய குழந்தைகள். அரசு பள்ளியில் படிக்கின்ற சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் மாணவர் செல்வங்கள். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் 2017-18-ல அரசு ஒதுக்கீட்ல, அந்த மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்ல 3145 இடங்கள். அதிலே அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிக்கு வெறும் ஒன்பது இடம் கிடைத்தது. நான் சிந்தித்தேன். எதிர்க்கட்சி கோரிக்கை வைக்கல, மக்கள் கோரிக்கை வைக்கல, நானும் அரசு பள்ளியிலே படித்த மாணவன். சாதாரண பள்ளிக்கூடத்தில், கிராமத்திலே படித்த மாணவன். என் மனதிலே தோன்றியது. ஏழை-எளிய குடும்பத்திலே பிறந்த மாணவ-மாணவிகள் ஏன் மருத்துவ கல்லூரியில் படிக்க கூடாது. பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கக் கூடாது. அந்த வாய்ப்பை எப்படியும் உருவாக்கித் தர வேண்டும் என்று என்னுடைய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கலந்து பேசினேன். சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசினேன். இதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினால் அந்த வாய்ப்பு அவர்களுக்கும் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதை நாம் செய்தோம். அதன் மூலமாக மருத்துவத்திலே, மருத்துவக் கல்வியிலே அரசு பள்ளியில் ஏற்படுகின்ற மாணவனுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து அமல்படுத்திய அரசாங்கம் அண்ணா.தி.மு.க அரசாங்கம். அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது. அந்த மருத்துவ கல்வி கட்டணத்தையும் அரசாங்கமே செலுத்தியது. இதனால் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், கிராம புறத்தில் இருக்கிறவர்கள், நகரப்புறத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் ஏழை-எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ்., டாக்டராக ஆகிறாங்கள். பல் மருத்துவராக ஆகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அவர்களே சாதனை!. சாதனை என்று வாயிலே சொன்னால் மட்டும் போதாது. சர்க்கரை என்று சொன்னால் போதாது. வாயில் போட்டால்தான் இனிக்கும். அதுபோல, நீங்கள் வெற்று அறிவிப்புகள் மூலமாக நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் சேவை செய்திருக்கின்றோம். மக்களுக்கு நன்மை செய்திருக்கின்றோம். நேரடியாக மக்களை சந்தித்து கேட்கின்றோம். இப்படிப்பட்ட 7.5 சதவீத மூலம் இடம் கிடைத்தவர்கள் 2160 பேர் அரசு பள்ளியில் படித்த ஏழை-எளிய மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ் டாக்டர் ஆகிறார்கள். இன்று மருத்துவராக பல் மருத்துவராக கல்வி பயின்று கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாதனைகளை படைத்த அரசாங்கத்தை பற்றி பத்தாண்டு காலம் கெடுத்து விட்டது வாய் கூசாமல் பேசுகிறீர்கள். நீங்கள் இப்படி ஒரு சாதனையாவது இந்த நாட்டு மக்களுக்கு படைத்திருக்கின்றீர்களா? சொல்லுங்கள் பார்க்கலாம்!
அதோடு இன்றைய தினம் எனக்கு முன்னாலே பேசினார்கள். தி.மு.க ஒரு குடும்ப கட்சி. கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியே மாநிலத்தைப்போல மத்தியிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அங்கேயும் கொள்ளை அடிக்க வேண்டும். இங்கேயும் கொள்ளை அடிக்க வேண்டும். அதற்கு ஆட்சி அதிகாரம் தேவை. அதற்கு தான் இவ்வளவு கஷ்டப்பட்டு இன்றைக்கு ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்னொன்றைக்கு ஸ்டாலின் சொல்கிறார் அன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி இருந்தாரே, மத்தியிலிருந்து என்ன கொண்டு வந்தார் என்று. தெளிவாக சொல்லுகிறோம். அம்மா ஆட்சியில் இருக்கின்ற பொழுதும் சரி, அம்மா மறைவுக்கு பிறகு, அம்மாவுடைய அரசு நாலு வருடம், இரண்டு மாதம் காலம் சிறப்பாக ஆட்சி கொடுத்தோம். மெட்ரோ ரயில் திட்டம் 62,000 கோடியில் கொண்டு வந்தோம். அதுபோல, ஒரே ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரி 11 கொண்டு வந்திருக்கிறோம். அது மட்டுமில்லாமல், நடந்தாய் காவிரி திட்டம். மேட்டூரில் இருந்து வருகின்ற நீர் கடலிலே கலக்கின்ற வரை நன்னீராக கலக்க வேண்டும். இடையிலே நகரத்திலிருந்து வெளியேறுகின்ற அசுத்த நீர் நதியிலே கலந்து நதி வீணாகி போகிறது. குடிப்பதற்கு கூட காவேரி தண்ணீர் லாய்க்கு அற்ற நிலையிலேயே இருக்கின்றது. அதை எண்ணி நடந்தாய் வாரி காவேரி திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா.தி.மு.க அரசாங்கம். அதையும் இப்ப நீங்கவந்து பிறகு கிடப்பில் போட்டு விட்டீர்கள். முக்கொம்பில் புதிய பாலம் நாங்கள்தான் கட்டி இருக்கிறோம்.இன்றைக்கு ஆதனூர், குமாரமங்கலம் தடுப்பணை கட்டி இருக்கின்றோம். தஞ்சை புகழூரில் தடுப்பணை கட்டியிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் சாலை, பாலங்கள் எல்லாம் அண்ணா.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டவைகள். அவருக்கு ஏதோ கண்ணு சரியா தெரியலைவில்லை போல. தெரிந்திருந்தால் அப்படி பேசி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்னொன்னு சொல்லுகிறார். கடந்த மாதம் ஜூன் மாதம் மேட்டூருக்கு வந்து ஸ்டாலின் தண்ணீர் திறந்தார். டெல்டா பகுதிகளில் இருக்கின்ற மக்கள் குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்று தண்ணீரை திறந்தார். இப்போது மேட்டூரிலே பேட்டி கொடுக்கும்போது சொன்னார். நான் டெல்டாகாரன் என்று வீர வசனம் பேசினார். வீரவசனம் பேசி தண்ணீர் திறந்துவிட்டீர்கள். விவசாயிகளும் அதை நம்பி அஞ்சரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தார்கள். இடையிலே தண்ணீர் பத்தவில்லை. மூணரை லட்சம் ஏக்கர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து. தண்ணீர் இல்லாம பயிh;கள் காஞ்சு, கருகிப் போச்சு.
அந்த காலகட்டத்தில் இந்தியா கூட்டணி அமைக்கிறார்கள். பெங்களுரில் பொதுக்கூட்டம் நடக்குது. அதுல ஸ்டாலின் கலந்து கொள்ள போகிறார். ஸ்டாலினை அப்போ கர்நாடக நீர் பாசனத் துறை அமைச்சர் வரவேற்கிறார். கர்நாடகா முதலமைச்சர் வரவேற்கிறார். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், கர்நாடக முதலமைச்சரும் வரவேற்கிறார்கள். அந்த நேரத்தில் எங்களுடைய டெல்டா பகுதியில் இருக்கின்ற விவசாயிகள் என்னை நம்பி, என்னுடைய அரசாங்கத்தை நம்பி இன்றைக்கு குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். பயிர்கள் காய்ந்து, கருகிபோகின்ற நிலை உள்ளது. ஒரு பத்து டி.எம்.சி தண்ணீர். எங்களுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை நீங்கள் உங்களுடைய அணையில் இருந்து திறந்து விட்டால் இந்த டெல்டாவில் காய்ந்துவரும் குறுவை சாகுபடியை காப்பாற்றிக் கொள்வோம் என்று கோரிக்கை வைத்திருந்தால், அவர்களும் தண்ணீர் திறந்து விட்டிருப்பார்கள். கேட்கல. அவருக்கு அதிகாரம் தான் முக்கியம். நாட்டு மக்கள் முக்கியம் அல்ல. அதனால் மூணரை லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து கருகி, வீணாய் போச்சு.
அந்த விவசாயி வடிக்கின்ற கண்ணீர். தோல்வியை உங்களுக்கு கொடுக்கும். ரத்தத்தை நேரடியாக சிந்தி, அந்த விவசாயி உழைத்து அந்த பயிரை நடவு செய்து, அவர் கண் எதிரே பயிர் கருகி நின்ற பொழுது எப்படி துடிதுடித்து இருப்பார் என்று எண்ணி பார்க்க வேண்டும். அதையெல்லாம் எண்ணி பார்க்க ஈர நெஞ்சம் கிடையாது அவர்களுக்கு. அது மட்டுமல்ல. அவர்களுக்கு இழப்பீடுதான் குடுத்தியா? அதுவும் இல்லை. அண்ணா.தி.மு.க ஆட்சி இருக்கின்ற வரை ஒவ்வொரு ஆண்டும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடி இடம்பெற செய்வோம். அப்படி ஏதாவது இயற்கை சீற்றத்தால், வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்டால் ஒரு ஹெட்டேருக்கு 84 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வாங்கிக் கொடுத்தோம். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில், திராவிட மாடல் ஆட்சியில் குறுவை சாகுபடி பயிருக்கு அந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கல. அதனால் அந்த இழப்பீட்டுத் தொகை விவசாயிக்கு கிடைக்கல. அதைக் கூட விட்டுடுங்க. எஸ்.டி.ஆர்.எப் மாநில பேரிட நிவாரண நிதி அதிலிருந்து அண்ணா.தி.மு.க ஆட்சியில் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினாலே விவசாயி படுகின்ற துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் எல்லா அனுபவித்தவர். அதனால விவசாயிகளுக்கு பயிர் பாதிக்கின்ற பொழுது 20,000 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். ஆனால், உங்களுடைய ஆட்சியில 13, 200 ரூபாய் கொடுத்தீர்கள். அதுவும் மத்திய அரசு தேசிய பேரிட நிவாரண நிதி 13,000 கொடுக்க சொன்னது. 13 ஆயிரத்து இருவது ரூபாய் கொடுக்கிறார். இவர் விவசாயத்தைப் பற்றி பேசுகிறார். இன்றைக்கு பேசுகின்ற பொழுது விவசாயி எடப்பாடி பழனிசாமி, விவசாயி என்று சொல்லிக்கொண்டு பச்சை துண்டு போட்டுக் கொண்டு பச்சை பொய் பேசுகிறார் என்று. யார் பச்சை பொய் பேசுவது, யாரு நானா ஸ்டாலினா, ஸ்டாலின் அவர்களே.
விவசாயிகளுக்கு எங்களுடைய ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து சாதனை படைத்திருக்கின்றோம். வேண்டுமென்றால் இதேபோல் மேடையை போடுங்கள். நீங்கள் ஒரு மைக்க புடிங்க, நானும் ஒரு மைக்கை பிடிக்கிறேன். அண்ணா.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம் என்பதை சொல்லுகின்றேன். திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை இது எல்லாம் டெல்டா பகுதி. டெல்டா பகுதியில இருக்கின்ற விவசாயிகள் அச்சத்திலே இருந்தார்கள். தன்னுடைய நிலம் ðPபோகி விடும் என்று அச்சத்தில் இருந்தார்கள். கடந்த தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் அமைச்சராக இருக்கின்ற பொழுது ஹைட்ரோ கார்பன், அங்கே இருக்கின்ற மீத்தேன் எடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். விவசாயிகளுடைய நிலம் விலை மதிக்க முடியாத நிலம். பொன்விளைகின்ற பூமி டெல்டா பூமி, முப்போகம் விளைகின்ற பூமி. அதை இந்த ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். அன்றைக்கு அமைச்சராக இருந்தார். அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எல்லா விவசாயிகளும் என்னிடத்திலே கோரிக்கை வைத்தார்கள். என்னிடம் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தார்கள். எங்களுடைய பகுதி பாலைவனம் ஆகிவிடும். அதை காப்பாற்றுங்கள். விவசாயிகள் அச்சத்திலே உறைந்து போயிருக்கிறார்கள் என்று கோரிக்கை வைத்து உடனே நான் சட்ட ரீதியாக சந்தித்து இன்றைக்கு டெல்டா பாசனத்திலே இப்படிப்பட்ட எந்த திட்டமும் கொண்டு வரக்கூடாது என்று இன்றைக்கு “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” என்ற அற்புதமான சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினேன். இது எங்களுடைய ஆட்சி, திறமையான ஆட்சி என்பதற்கு சான்று. இதைவிட என்ன வேண்டும் ஸ்டாலின் அவர்களே. பத்தாண்டு காலத்திலே கெடுத்து விட்டீர்கள். தமிழ்நாட்டை கெடுத்து விட்டீர்கள் என்று சொன்னீர்களே. நாங்களா தமிழ்நாட்டை கெடுத்தோம். பொன் விளைகின்ற பூமியை மிகப்பெரிய நிறுவனத்திற்கு தாரை வார்க்க பார்த்தீர்களே. நீங்கதான் கெடுத்தீர்கள். அதுமட்டுமல்ல, இன்றைக்கு மேததாது என்ற இடத்திலே ஒரு அணைகட்டி தண்ணீரை தேக்க கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு நீர் பாசன துறை அமைச்சர் சொல்லுகிறார். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கொடுக்க மாட்டேன் என்று. அங்கு இருக்கின்ற முதலமைச்சர் சொல்லுகிறார் மேகதாவிலே அணை கட்டியே தீருவேன் என்று. இதற்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாயே திறக்கல. இன்றைக்கு தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் துரோகம் செய்கின்ற ஸ்டாலினுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.
அண்ணா.தி.மு.க அரசாங்கம் இருக்கின்ற பொழுது இப்படிப்பட்ட பிரச்சனை வந்தபோது, உடனடியாக உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடுத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்திய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். அதுமட்டுமல்ல இன்னும் சொல்லுகிறார். மத்தியிலிருந்து என்ன நிதியை நீங்கள் பெற்றீர்கள் என்று. 12 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சியில் இடம்பெற்று இருந்தது தி.மு.க. காங்கிரஸிலும் இடம்பெற்றிருந்த 1999-ல் பாரதிய ஜனதா ஒரு கூட்டணி வைத்து ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்து அதிகாரத்தை அனுபவித்தது தி.மு.க கட்சி. இப்படி 12 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்? அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் நிதியமைச்சர் ஆக இருக்கின்றார். அவரை முறையாக அணுகி தமிழ் நாட்டிற்கு இன்ன இன்ன திட்டத்திற்கு நிதி வேண்டும் என்று நீங்கள் கேட்டிருந்தால், வந்திருக்கும் அதுவும் செய்ய தவறி விட்டீர்கள். ஆக, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க கட்சி. அதிகாரத்தில் மத்தியிலே இருக்கின்ற பொழுது நீங்கள் எதையுமே செய்யல. குடும்பத்தை தான் பார்த்தீர்கள். குடும்பத்தில் இருக்கிற உறுப்பினர்கள் தான் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று எண்ணிணீர்கள.; தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. கவலைப்படவில்லை. ஆகவே, எண்ணிப்பார்க்க வேண்டும். உங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் என்ன செய்ய போறாங்க? 2019-ல் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதே ஐந்தாண்டு காலம் நாடாளுமன்றத்தில் என்ன செய்தார்கள்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களாக 37 பேரை தேர்ந்தெடுத்தபொழுது, தமிழ்நாட்டு சார்பாக அந்த 37 பேரும் சிறப்பான முறையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றினார்கள். உச்ச நீதிமன்றத்திலே காவேரி நதிநீர் பிரச்சினை வந்த பொழுது அந்த தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்தியது உடனடியாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே ஒத்திவைத்த கட்சி அண்ணா.தி.மு.க கட்சி. அண்ணா.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சினை என்று வருகின்ற பொழுது, நம்முடைய உரிமைகள் என்று வருகின்ற பொழுது உரிமை பெறுவதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே நாங்கள் ஒத்தி வைத்தோம். அதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் விளைவாக “காவேரி மேலாண்மை ஆணையம”;. “காவேரி நீர் முறைப்படுத்தும் குழு” மத்திய அரசு அமைத்தது.
ஆக இப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று வருகின்ற பொழுது இந்த தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளை காப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நிதியை பெறுவோம். தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு நாங்கள் அடித்தளமாக விளங்குவோம்.
ஆனால், தி.மு.க அப்படி அல்ல! அவங்க குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக துடித்துக் கொண்டிருக்கின்ற கட்சி தி.மு.க கட்சி. எனக்கு முன்னாலே சொன்னார்கள் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி மீண்டும் நீதிமன்றத்தில் தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள். திகார் ஜெயில் ரெடியாக இருக்கிறது. யார்? யார்? போவார்கள் என்று தெரியவில்லை.
அதேபோல, இங்கே இருக்கின்ற அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் தப்பிக்கவே முடியாது. நீதிமன்றத்தில் படிக்கட்டு ஏறி, ஏறி இறங்கி கிட்டு இருக்கிறார்கள். அவர்களும் விரைவாக எங்கே போகனுமோ அங்கே போவார்கள். அது மட்டுமல்ல. இங்கே போதை பொருளை பற்றி சொன்னார்கள். இன்றைக்கு தி.மு.க கட்சியின் அங்கம் வகிக்கின்ற ஒரு நபர் ஜாபர் சாதிக். இவர் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர். உலகத்திலேயே அயலக அணி அவர்கள் தான் வைத்திருக்கிறார்கள். இது மாதிரி கடத்தலுக்கு வைத்திருப்பார்கள் போல இருக்கிறது. எந்த கட்சியிலையாவது அயலக அணி என்று வைத்திருக்கிறார்களா? அப்படி ஒரு பேரை வைத்து, அதற்கு ஒரு பொறுப்பாளரை போட்டு, அந்த பொறுப்பாளர் வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்திக்கொண்டு இருக்கிறார் பல ஆண்டு காலமாக, பல ஆயிரம் கோடிக்கு போதை பொருள் கடத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு போதைப் பொருள் மாநிலமாக மாறுவதற்கு காரணம் தி.மு.கவும், தி.மு.க நிர்வாகிகளும்தான். இன்னும் சொல்லப்போனால் 2022-2023 மதுவிலக்கு ஆயத் தீர்வை கொள்கை விளக்க குறிப்பிலே பக்கம் 22-லே ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. பள்ளிக்கு அருகிலே, கல்லூரிக்கு அருகிலே கஞ்சா விற்கப்படுகிறது. அதில் கண்டறியப்பட்டவர்கள் 20138 பேர் கஞ்சா விற்பனை செய்ததாக பள்ளி கல்லூரி அருகிலே கஞ்சா விக்கப்பட்டது என்று ஸ்டாலினை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், கைது செய்தது 148 பேர். மத்தவங்க எல்லாம் எங்கே போனார்கள்? கஞ்சா வச்சு இருந்தாலும் குற்றம், விற்றாலும் குற்றம், கொண்டு போனாலும் குற்றம். அப்படி இருக்கின்ற பொழுது ஸ்டாலினே கொள்கை விளக்க குறிப்பிலே குறிப்பிட்டு இருக்கிறார் 2138 பேர் கஞ்சா வைத்திருக்கிறார்கள். கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஏன்? கைது பண்ணல எல்லாம் தி.மு.க காரங்க. அவர் எங்கே போய் கைது பண்றது. எங்கே போதை பொருளை போய் தடுக்கிறது. அப்பொழுது இருந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு அடிக்கடி சொல்லுவார். கஞ்சா ஆப்பரேஷன் ஓ பாயிட் 2, ஓ பாயிட் 3, ஓ பாயிட் 4, என ஓ போட்டுகிட்டே ரிட்டர் ஆகியும் போய் விட்டார். எங்க போய் கஞ்சாவை கண்டுபிடித்தார். இப்படி சட்ட-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.
எனக்கு முன்னாடி தேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் சொன்னபடி தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் கொடுமை நடக்காத நாளே இல்ல. அப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சியை செய்து கொண்டு இருப்பது ஸ்டாலின். அண்ணா.தி.மு.க ஆட்சியை பற்றி குறை சொல்லுகிறார். ஸ்டாலின் அவர்களே உம்முடைய ஆட்சியில் என்னென்ன செய்தீர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தேர்தல் பத்திரம் 656 கோடிக்கு வாங்கி இருக்கிறீர்கள். மூன்று ஆண்டுக்கு 2021, 2022, 2023 மூன்று ஆண்டில் 656 கோடி தேர்தல் பத்திரத்தை அதிகமாக வாங்கியது தமிழ்நாட்டில் ஸ்டாலின் குடும்பம். நீங்கள் எங்களைப் பற்றி, ஊழலை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. இதையெல்லாம் 2026-லே அண்ணா.தி.மு.க ஆட்சி மலரும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அதுமட்டும் அல்ல. இப்பொழுது ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும், கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதாக. ஸ்டாலின் அவர்களே நாங்கல்லாம் பொன்விழா கண்ட கட்சி. பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இருக்கின்ற பொழுதும் எவ்வளவோ வழக்குகளை சந்தித்து விட்டோம். அம்மா இருக்கின்ற பொழுதும் எவ்வளவோ வழக்குகளை சந்தித்து விட்டோம். பலமுறை சிறைக்கு சென்று வந்து விட்டோம். அதைப்பற்றி கவலையே இல்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதுதான் எங்களுடைய லட்சியம். அதற்காக எத்தனை தியாகங்களையும் நாங்கள் செய்ய தயார். ஒன்றும் மிரட்டி எல்லாம் எங்களை பணிய வைக்க முடியாது. ஸ்டாலின் அவர்களே. நான் நினைத்திருந்தால் நான்கு ஆண்டு காலம் நான் முதலமைச்சராக இருந்தேன். எத்தனை வழக்குகள் உங்கள் மீதும், இப்போ இருக்கின்ற அமைச்சர்கள் மீதும் வழக்கு போட்டிருக்க முடியும். பொறுமையா இருப்போம். கவலைப்படாதீங்க நிறைய ஊழல் பண்ணி இருக்காங்க. அத்தனையும் சேகரித்து வைத்திருக்கிறேன். 2026 இல் ஆட்சி மலர்கின்ற பொழுது பாருங்கள். அதோட முதலமைச்சர் என் மீதும் வழக்கு போட்டு மிரட்டி பார்த்தார். உச்ச நீதிமன்றம் வரைக்கும் போயி மீண்டும் உயர் நீதிமன்றம் வந்து வழக்கு நடத்தி நான் நிரபராதி என வந்தேன். வழக்கு போட்ட ஆர்.எஸ்.பாரதி அந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்று சொன்னார். நான் இல்ல நீதிமன்றத்தில் நான் வழக்கு நடத்துவேன் என்று சொன்னேன். அந்த வழக்கை நடத்த வேண்டும் என்று சொன்னேன். வழக்கு நடத்தி நிருபராதி என்று வெளியிலே வந்திருக்கிறேன் ஸ்டாலின் அவர்களே. அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? புதிய தலைமை செயலகம் கட்டுவதில் ஊழல் நீதிமன்றத்தில் இருக்கிறது. தடை ஆணை வாங்கி வைத்திருக்கிறீர்கள்அந்த வழக்கை நடத்த தயாரா? அண்ணா தி.மு.கவை பொறுத்தவரை மடியிலே கனமில்லை வழியிலே பயம் இல்லை ஸ்டாலின் அவர்களே.
நான் தொண்டனாக இருந்து கிளை செயலாளராக ஆகி இன்றைய தினம் உங்கள் முன் பொதுச்செயலாளராக இருக்கின்றேன். எந்த ஒரு தொண்டனுக்கும் எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம். அதேபோல் மேடையிலே வீற்றிருக்கின்ற கழக நிர்வாகிகளுக்கும் எந்த பிரச்சனை வந்தாலும் என் உயிரை கொடுத்தாவது உங்களை காப்பாற்றுவேன். நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் இந்த பதவிக்கு வந்திருக்கின்றேன் ஸ்டாலின் அவர்களே.
நான் சிறுவயதில் இருந்து இன்றைக்கு இந்த வயது வரை பல்வேறு சோதனைகளை தாண்டி வந்திருக்கிறேன் ஸ்டாலின் அவர்களே. உங்கள் மிரட்டல், உருட்டலுக்கெல்லாம் நாங்கள் பயம் இல்லை. அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அண்ணா.தி.மு.ககாரன் அல்ல. எங்களிடத்திலே வலிமை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. நம்பிக்கை இருக்கின்றது.
ஆகவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே நாம் வெற்றி பெற உழைக்க வேண்டும். அதேபோல சிறுபான்மையின மக்கள் நம்முடைய தமிழ்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மையினர் மக்கள் இந்த மண்ணிலே பிறந்த சிறுபான்மையின மக்கள் எவரெருக்கும் பிரச்சினை வந்தால் நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக துணை நிற்போம். உங்களோடு இருந்து அதை முறியடிப்போம். சிறுபான்மையினர் மக்கள் அச்சப்பட தேவையில்லை. நான் ஓட்டுக்காக சொல்லவில்லை. மனிதாபித்தோடு சொல்லுகிறோம். அண்ணா.தி.மு.கவுக்கு மதமும் கிடையாது, ஜாதியும் கிடையாது. எல்லா மதமும் சமம். எல்லா ஜாதியும் சமம். அப்படித்தான் எங்களுடைய தலைவர்கள் எங்களை வழி நடத்தி இருக்கிறார்கள். இதே சிறுபான்மையினர் மக்கள் எதற்கும் அஞ்ச தேவை இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நிச்சயமாக அண்ணா.தி.மு.க முன்னிற்கும். கூட்டணி கட்சி முன்னிருக்கும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.கவிற்கு மரண அடி கொடுக்கின்ற தேர்தலாக இருக்க வேண்டும். இந்த தேர்தலோடு தி.மு.க என்கின்ற கட்சி காற்றோடு கரைய வேண்டும். அதேபோல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருடைய வெற்றி சின்னம், புரட்சித்தலைவி அம்மாவுடைய வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
அதேபோல, நமது கூட்டணியில் அங்க மதிக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு கேப்டனுடைய வெற்றி சின்னம், சகோதரி பிரம்மலதா அவருடைய வெற்றி சின்னம் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு வெற்றி பெற செய்யுங்கள். புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமிக்கு விரைவிலே சின்னம் கிடைக்க இருக்கின்றது. அந்த சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி நம்மோடு இணைந்து இருக்கிறார்கள். அருமை சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். பாண்டிச்சேரியில் நிற்கின்ற வேட்பாளருக்கு இரட்டை இலை வெட்டி சின்னத்திலே வாக்குகள் கேட்டு வெற்றி பெறச் செய்யுங்கள். விளாங்கோட்டிலே கழகத்தின் சார்பாக, கூட்டணி சார்பாக போட்டியிடுகின்ற சகோதரி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்!! ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்! இரட்டை இலைக்கே வாக்களிப்பீர்!! முரசு சின்னத்திற்கு வாக்களிப்பீர்!! என்று சொல்லி இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!
இவ்வாறு கழகப்பொதுச்செயலாளர்,  எடப்பாடியார் பேசினார்.

இக்கூட்டத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முகம்மது முபாரக், புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை.ஜெகன்மூh;த்தி, அகில இந்திய பார்வாடு பிளாக் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் ஆகியோர் வேட்பாளர்களை ஆதாpத்து பேசினர்.
இக்கூட்டத்தில் கழக அவைத்தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கழகப் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்களுமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., நத்தம் இரா.விஸ்வநாதன், கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், கழக அமைப்புச்செயலாளர்கள் எஸ்.வளர்மதி, டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக, சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.