மகளிர் சுய உதவி குழுவிற்கான திறன் மேம்பாடு பயிற்சி

0 28
Stalin trichy visit

 

திருச்சி, ஆக. 25  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கான திறன் மேம்பாடு பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர்  சத்யபிரியா  கலந்து கொண்டு இயற்கை இடு பொருள்கள் பயன்படுத்தி ரசாயன உரத்தின் பயன்பாட்டினை குறைத்து நஞ்சிலா உணவு உற்பத்திய பெருக்க வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இது சாரல் வாழ்வு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இருந்து  ஹரி கிருஷ்ணன்  விவசாயிகளுக்கு பஞ்சகவியம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் கரைசல் தயார் செய்தல்,கன ஜீவாமிர்தம், ஹுமிக் அமிலம், மூலிகை பூச்சி விரட்டி தயார் செய்தல் பற்றி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கருக்கு 5 liter பஞ்சகவ்யம் தயாரித்தல் தேவையான பொருட்களின் அளவைக் குறைத்து 5 லிட்டர் அல்லது சிறிய அளவில் பஞ்சகவ்யம் தயாரிக்க, 1 கிலோ நாட்டு மாட்டு சாணம், 100 மில்லி நெய், மற்றும் அதற்கேற்ப மற்ற பொருட்களைச் சேர்த்து எளிய முறையில் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் (சிறிய அளவு)நாட்டுப் பசு மாட்டுச் சாணம் – 1 கிலோநாட்டுப் பசு மாட்டு நெய் – 100 மில்லிநாட்டு மாட்டுத் கோமியம்- 600 மில்லிநாட்டுப் பசு பால் – 400 மில்லிநாட்டுப் பசு தயிர் – 400 மில்லிகரும்பு வெல்லம் – 200 கிராம் (அல்லது கரும்புச்சாறு 400 மில்லி)நன்கு கனிந்த வாழைப்பழம் – 2 முதல் 3இளநீர் – 600 மில்லிதண்ணீர் – 600 மில்லிதயாரிக்கும் முறைமுதல் படி (நாட்கள் 1 முதல் 4):ஒரு அகலமான பிளாஸ்டிக் பாத்திரம் அல்லது மண் பானையை எடுத்துக்கொள்ளவும்.1 கிலோ சாணம் மற்றும் 100 மில்லி உருக்கிய நெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு பிசையவும்.இதனை பாத்திரத்தில் வைத்து, பூச்சிகள் வராமல் இருக்க ஒரு மெல்லிய துணியால் மூடி நிழலில் வைக்கவும். தினமும் ஒருமுறை இதைக் கலக்கி விட வேண்டும்.இரண்டாம் படி (ஐந்தாம் நாள்):5-வது நாளில் கோமியம், பால், தயிர், வெல்லம், இளநீர், தண்ணீர் மற்றும் மசித்த வாழைப்பழங்களைச் சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாக மரக்கட்டையால் நன்கு கலக்கிவிடவும்.மூன்றாம் படி (நொதித்தல் காலம்):அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கலவையை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.பாத்திரத்தின் வாயை எப்போதும் ஒரு வலைத் துணி அல்லது காற்றில்லா துணியால் மூடியிருக்க வேண்டும்.20 முதல் 30 நாட்களில் நறுமணத்துடன் கூடிய தரமான பஞ்சகவ்யம் தயாராகிவிடும். செயல் விளக்கமாக செய்து காண்பித்தார்.

இதற்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர்சபரிசெல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.