கஞ்சா- புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது
திருச்சி ஆக 24 திருச்சி பிராட்டியயூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா முதல் செய்யப்பட்டது.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி கே.கே. நகர் உடையான்பட்டி பகுதியில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கே.கே. நகர் போலீசார் தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கொட்டப்பட்டு இந்திரா நகர் சேர்ந்த சிவச்சந்திரன் (வயது 46) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் மூட்டையில் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிவ சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் திருச்சி குழுமாயிக் கரை பூங்கா அருகே புகையிலைப் பொருட்கள் விற்றதாக தென்னூர் பகுதியை சேர்ந்த முகமது ஜாவித் (வயது 27) என்பவரை திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 363 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் ஏல சீட்டில்