திருச்சியில் துரை வைகோ வாக்கு சேகரிப்பு

0 237
Stalin trichy visit

தஞ்சை, மார்ச் 26 திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ இன்று பெரிய மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பா. மாணிக்கம் இல்லத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்
அப்போது, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா, ஏ. அய். டி. யு. சி பொதுச் செயலாளர் கா. சுரேஷ், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் சி. செல்வகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம் ஆர் முருகன், பொன்மலை பகுதி செயலாளர் ராஜா, அபிஷேகபுரம் பகுதி செயலாளர் அஞ்சலை, கிழக்கு பகுதி செயலாளர் அபுதாகிர், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் பார்வதி, விவசாய சங்க தலைவர் சிவ சூரியன், தொழிற்சங்க தலைவர் நடராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
கழகத்தின் சார்பில் துணை பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி இரா. சோமு, டி.டி.சிசேரன், ஆசை சிவா, மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம், வெ. அடைக்கலம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.