சி.பி.எம். கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் வேட்பாளர் துரை வைகோ
திருச்சி, மார்ச் 26 திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று மாலை 4.30 மணியளவில், மாநில குழு உறுப்பினர் தோழர்கள் ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆதரவு திரட்டினார்.
நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வெற்றிச் செல்வன்,ரேணுகா, நடராஜன், சிவராஜ், மல்லிகா, ரங்கராஜன், தெய்வநிதி, பன்னீர்செல்வம், சந்தானம், ரவிக்குமார், பகுதிச் செயலாளர்கள் சுரேஷ், வேலுச்சாமி, ரஃபீக், விஜயேந்திரன், தங்கராஜ், மணிமாறன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர்கள் எம்.சார்லஸ், சந்தானம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் அலெக்ஸ்,
மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள்.
மறுமலர்ச்சி தி.மு.க சார்பில், கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன், ஜெயசீலன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.இராசமாணிக்கம், வெ.அடைக்கலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தோழர்கள் உடனிருந்தார்கள்.