மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் துரை வைகோ
திருச்சி, மார்ச் 27 மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டக் நிர்வாகிகளை துரை வைகோ நேரில் சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், – மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர் புதுமடம் ஹலீம், திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முகமது, திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பயஸ் அகமது, திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷரப் அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட தலைவர் இலியாஸ், மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மேற்கு மாவட்ட தலைவர் இப்ராம் ஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர்கள் (திருச்சி கிழக்கு) காஜாமைதீன், (திருச்சி மேற்கு) ஹிமாயூன், மாவட்ட துணைத் தலைவர்கள் சையது முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, மாவட்ட செயலாளர் நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சி வர்த்தகர் சங்க மண்டல செயலாளர் முகமது அலி ஜின்னா, மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் முகமது காசிம் உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.