இந்தியா கூட்டணிக்கு தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு
திருச்சி, மார்ச் 28 இந்தியா கூட்டணிக்கு தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், விவசாய விலைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவிப்பதாக சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்