ஜூன் 19 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் அழைப்பு

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 15  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று நடைபெறவுள்ளது என்று  மாவட்ட ஆட்சியர்  பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டத்தில் ஜூன்-2026-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19.06.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்  பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.