உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.2.20 லட்சம் பறிமுதல்

0 222
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் மின் வாரியம் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையின் பி.பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் பைக்கில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ள மின் வாரியம் அலுவலகம் அருகில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை பி. பிரிவின் அலுவலர் ரமேஷ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருவளநல்லூரைச் சேர்ந்த கிருபாகரன் மோட்டார் பைக்கில் லால்குடியிலிருந்து பெருவளநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை மறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்த போது உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.பின்னர் அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகன் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப்துல் காதர் ஆகியோர் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டு லால்குடி சார்நிலை கருவூலகத்தில் வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.