அமைச்சருடன் இணைந்து முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டினார் துரைவைகோ

0 289
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28   அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் இந்திய கூட்டணியினுடைய திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோ திருச்சியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் இந்தியா கூட்டணி மறுமலர்ச்சி திமுகவின் வெற்றி வேட்பாளர் துரை வைகோ  வருசை ராவுத்தர் சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் OFTசிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை  சகாயராஜ்  மற்றும்  திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன திருஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயத்தில் அருளானந்தம் ஆகியோரை  சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர்கள்
ராஜ்முகம்மது, மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம்.கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலாமாமன்ற உறுப்பினர் பொற்கொடி, ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.