தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவின்படி செயல்படுகிறதா? இரா.முத்தரசன் கேள்வி

0 163
Stalin trichy visit

திருச்சி,மார்ச் 29 திருச்சி மாவட்டம் துறையூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருண்நேருவைஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் முத்தரசன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா? அல்லது மோடியின் உத்தரவை கேட்டு செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினார் அப்படி மோடியின் பேச்சைக் கேட்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டால் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியதை அவர் எடுத்து கூறினார். இந்தியா கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்கப்படவில்லை அதேபோல் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் வழங்கப்படவில்லை. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள அமமுகவிற்கு குக்கர் சின்னமும் த.மா.கவிற்கு சைக்கிள் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் சின்னமும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கேட்கும் சின்னங்களை தராமலும் தேர்தல் ஆணையம் செயல்படுவதால் தேர்தல் ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டி பேச்சினார். மேலும் இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.