எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது : தி.மு.க.வினர் சாலை மறியல்

0 15
Stalin trichy visit

திருச்சி, ஆக.4 தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி பிரச்சினையில் த.வெ.க. அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி இன்று காலை சென்னை நீலாங்கரையிலுள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.