அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஏப். 15 திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஏப்.14) திருச்சி கிழக்கு தொகுதி இ.பி ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தீண்டாமை ஒழிப்பு சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் உறுதிமொழி அமைச்சர் அன்பில் தொடர்ந்து மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஏற்கப்பட்டது
இந்நிகழ்வில் இந்திய கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோ, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மூக்கன், செங்குட்டுவன், ராஜேஸ்வரன் பகுதி கழகச் செயலாளர் மோகன், நீலமேகம், ராஜ்முகம்மது மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்