அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஏப். 15 திருச்சியில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஏப்.14) , மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகர மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ், அவை தலைவர் அம்பிகாவதி மற்றும் கழக நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, செவந்தி லிங்கம், முத்துச்செல்வம் மோகன்தாஸ், இளங்கோ கமல் முஸ்தபா, ராமதாஸ்,, பாலசுப்ரமணியன் மூவேந்தரன், கருப்பையா புஷ்பராஜ், முகுந்தன் வழக்கறிஞர் அந்தோணி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்