மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

0 338
Stalin trichy visit

திருச்சி, ஏப்.16  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தாக்குடி பெரிய ஏரியில் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி கண்டித்ததால் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகிழம்பாடி ஊராட்சியில் உள்ள புள்ளம்பாடி தெருவைச் சேர்ந்தவர்  ரவிச்சந்திரன்(50). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்ததாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி மற்றும் மகன் கண்டித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரன் இருங்களூர் ஊராட்சியில் உள்ள புரத்தாக்குடி பெரிய ஏரியில் உள்ள மரத்தில் கயிற்றால்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.