திருச்சியில் இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் உருவச்சிலை: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்
திருச்சி, செப்.25 மறைந்த இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் உருவச் சிலையை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்
திருச்சி குழுமணி செல்லும் சாலையில் உள்ள சீரா தோப்பு பகுதியில் பாரத பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் மறைந்த இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் நினைவிடம் அமைந்துள்ளது இங்கு அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது மணி மண்டபம் முன்பு அவருடைய மார்பளவு உடைய திரு உருவ சிலையை இன்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியன் மற்றும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
வீரத்துறவி ராம. கோபாலன் சிலையை திறந்து வைக்க புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வருகை தந்து உள்ளேன் இந்துக்களுக்கு வழிகாட்டியாக அவரது வாழ்க்கை இருந்தது அவர் இல்லை என்றாலும் அவர் புகழ் நிலைத்து இருக்கின்றது அவரை போற்றுகின்ற வகையில் மணிமண்டபம் அமைய உள்ளது என்றார்
“தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனி மாநில தலைவர் காடீஸ்வரர். சுப்பிரமணியன் பேசியது:*
ராமகோபாலன் ஜி அவர்களின் திருஉருவ சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களுக்காக பாடுபட்டவர். மேலும் நம்மளுடைய பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக இந்த பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. இன்று இதே இடத்தில் ராமகோபாலன் ஜி அவர்களின் நினைவிடம் அமைத்து மணிமண்டபம் மிகப் பிரமாண்டமாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இதில் 12 ஜோதி லிங்கம் நிறுவபடும். இந்த ஜோதி லிங்கம் தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்ற பிறகு இங்கு நிறுவபடும். தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்தார்.