சமயபுரம் கோவிலில் சிறப்பு விளக்கு பூஜை

0 347
Stalin trichy visit

திருச்சி, ஏப்.24  இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் நேற்று சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனூக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6. 30 மணி அளவில் பெண்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்திடவும் உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு 22 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.
திருவிளக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.