நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு
திருச்சி, ஏப்.24 திருச்சி மாவட்டம் துறையூர் மங்களாபுரம் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு
துறையூர் திருச்சி சாலையில் உள்ள மங்களாபுரம் அரசு மதுபான கடை அருகே பெண் புள்ளிமான் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண் புள்ளி மானை பார்த்தபோது அது நாய்கள் கடித்து குதறியதால் உயிரிழந்தது தெரிய வந்தது இதை அடுத்து உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்ட துறையூர் வனத்துறையினர் அதை அருகே உள்ள புலிவலம் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். மங்களாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து மான்கள் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதால் அங்கிருந்த நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.