கிராப்பட்டியில் திமுக சார்பில் 2000 பேருக்கு நிவாரண பொருள்கள் – அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திமுக சார்பில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கிராப்பட்டி 41 வார்டு பகுதி வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம் ஏற்பாட்டின் பேரில்5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பினை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சுமார் 2000 பேருக்கு வழங்கினார். பின்பு நிவாரணப் பொருள்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடையே நடந்து சென்று அவர்களிடமிருந்து குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கிழக்கு இனிகோ இருதயராஜ், மணப்பாறை அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்