மகாகாளி கோயிலில் 6 கிராம் தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

0 361
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலத்தில் உள்ள மகாகாளி கோவிலின் பீரோவில் இருந்த 6 கிராம் தங்கத் தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலத்தில் அமைந்துள்ளது மகாகாளி கோவில்.இக்கோயிலில் நன்னிமங்கலம் பழைய குடியானத் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (53) பூசாரியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடந்த 29 ம் தேதி இரவு 9.30 மணி அளவில் கோவிலை சாத்திவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நேற்று கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயிலில் இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் பீரோவைப் பார்த்த போது பீரோவில் இருந்த 6 கிராம் தங்கத் தாலிச் செயினை மர்ம நபர்கள் திருடிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.