தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

0 256
Stalin trichy visit

திருச்சி, மே 2  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகர கழகம் சார்பாக, சத்திரம் பேருந்து நிலையத்திலும் மற்றும் ஏனைய பகுதி கழகங்களின் சார்பாக, அரியமங்கலம் – பால்பண்ணை, காந்தி மார்க்கெட், பாலக்கரை ரவுண்டானா, கீழபுதூர், எல்.ஐ.சி காலனி, கே.கே.நகர் பேருந்து நிலையம், ஏர்போர்ட், ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் –  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்து மோர் தர்பூசணி இளநீர் வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், மாவட்ட – மாநகர நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், லீலாவேலு, செங்குட்டுவன், மூக்கன், சந்திரமோகன், பொன் செல்லையா, நூர்கான், தமிழ்ச்செல்வம், சரோஜினி மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் விஜயகுமார், மோகன், பாபு, ராஜ்முகம்மது, மணிவேல், மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.