நாய்கள் கடித்துக் குதறியதில் மான் உயிரிழப்பு
திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் கிராமத்தில் நாய்கள் கடித்து குதரியதில் புள்ளிமான் உயிரிழந்தது.
கோட்டாத்தூர் ஏரிக்கரை பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை மீட்டு மான் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.