திருச்சியில் 97 கிலோ குட்கா பறிமுதல் : 3 பேர் கைது

0 344
Stalin trichy visit

திருச்சி, மே 8 பொது மக்களிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்குமார், ஒத்துழைப்பில் திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில், காவல்துறையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் இணைந்து நடத்திய சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்திரகுமார், ஞானசேகர், ஜெயச்சந்திரன் ஆகியோரிடமிருந்து 97 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு மூன்று நபர்கள் மற்றும் இரு வாகனத்தையும் மார்க்கெட் காவல் நிலையத்தில் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, மகாதேவன், வடிவேல், பொன்ராஜ், அன்புச்செல்வன், சண்முகசுந்தரம் உடன் இருந்தனர். மேலும் பொதுமக்களும் இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருந்தால் 9944959595, 9444042322 இந்த எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் என்று திருச்சி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.