லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 15 பேர் காயம்

0 345
Stalin trichy visit

திருச்சி, மே 9  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சனமங்கலம் பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் 15 பேர் படுகாயம் மற்றும் சிறிய காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சனமங்கலத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகளுக்கு படுகாயம் மற்றும் சிறிய காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்த தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுகனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டினர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.