தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
திருச்சி, மே 9 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் மேலூர் பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் மேலூர் பஜார் பகுதியில் மண்ணச்சநல்லூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலூர் பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜா (31)என தெரிய வந்தது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார அவரை கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூ. 2740 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.