மணப்பாறையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை

0 291
Stalin trichy visit

திருச்சி, மே 11  திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வெப்பத்தின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று இரவு மிதமான மழை பெய்த நிலையில் இன்று காலை திடீரென மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் நீர் பெருக் கெடுத்து ஓடியது. இதுமட்டுமின்றி தொடர் வெப்பத்தின் தாக்கம் மழையால் குறைந்து விட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல் மணப்பாறையில் உள்ள புகழ் பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுக்க உள்ள நிலையில் மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பக்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.