குடும்ப பிரச்சனையில் திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 237
Stalin trichy visit

 

திருச்சி, மே 15  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே செங்கினிப்பட்டியில் திருமணமான ஒன்றரை வருடத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே செங்கினிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி  வளர்மதி(33). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வளர்மதி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளர்மதி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வளர்மதியின் அம்மா அன்னலட்சுமி மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களே ஆனதால் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.