முக்கொம்பு மேலணையை கட்டிய பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 183
Stalin trichy visit

திருச்சி, மே 15 திருச்சி முக்கொம்பு மேலணையை கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் சர்.ஆர்தன் காட்டன் பிறந்த நாளை முன்னிட்டு (மே15) முக்கொம்பில் இருக்கும் அவரது சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி முக்கொம்பில் மேலணை கட்டி டெல்டா மாவட்டங்களாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆங்கிலேயே பொறியாளர் சர்.ஆர்தன் காட்டன் இவரது 221 ஆவது பிறந்த தினம் இன்று (மே15) ஆர்தர் காட்டானின் அரும்பணியை கவுரவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட விவசாயிகள் சார்பில் முக்கொம்பு கொள்ளிடம் கரையில் இருக்கும் அவரது சிலைக்கு திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.