திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

0 345
Stalin trichy visit

திருச்சி மே 15 கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார் – நூற்றுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்குசங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கர்  நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தில் உரிமையாளர் பெலிக்ஸ்ஜெரால்ட் கடந்த 10ம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட, முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக நூற்றுக்கு மேற்பட்ட பெண் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சவுக்குசங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.