தனியாக வாழ்ந்து வந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை

0 241
Stalin trichy visit

திருச்சி, மே 17  திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு அருகே ஒரு கடை முன்பு தனியாக வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு அருகே ஒரு கடை முன்பு முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நேற்று சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கதிரேசன் கோவில் தெருவைச்சேர்ந்த பத்திர எழுத்தர் செல்லையா (65) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 16 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்லையா பல்வேறு கோயில் பகுதிகளில் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் திருச்சிக்கு வந்த செல்லையா சமயபுரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக சமயபுரம் வந்தார்?, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன?, கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.