ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் உலக ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது

0 291
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 1  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மேற்கு பகுதியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஜூன் 1ந்தேதி உலக ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் ஜுன் 1 ந்தேதி இன்று உலக ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் மேற்கு பகுதியில் திருச்சி புறநகர் மாவட்டம் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சார்பில் உலக ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிஐடியு தொழிளார்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் பகுதி தலைவர் மணிவண்ணன், பகுதி செயலாளர் செந்தில், ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர் தண்டபாணி ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டது.

இது நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பா. சந்திரசேகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து ஓட்டுநர் கள் முன்னிலையிலும் ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில்

சாலை விதிகளை மதிப்போம்!

சாலை விபத்தை தவிர்ப்போம்!

ஓட்டுநர் தொழிலை நேசிப்போம்!

பெண்கள் குழந்தைகள் பயணத்தை பாதுகாப்போம்!

மோட்டார் வாகன தொழிலை நேசிப்போம்!

உரிமைகளை பாதுகாப்போம்!
மற்றும் ஜூன் 1 உலக ஓட்டுநர் தினத்தை மத்திய அரசு அரசிதழ்களில் வெளியிட வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சயில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.