விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டு காவலில் சிறை வைப்பு
திருச்சி, ஜூன் 1 விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், இலாபகரமான விலை கொடுக்காமல், நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி திருச்சி வருகையையோட்டி ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விமான மறியல் செய்ய இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை தலைமை அலுவலகத்தில் காவல்துறையினர் வெளியில் வர விடாமல் வீட்டு காவலில் அடைத்து வைத்துள்ளனர்.