வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் முகவர்களுக்கு கடும் கட்டுபாடு

0 218
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3 நாடாளுமன்ற தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்  வாக்கு எண்ணிக்கை  மையத்துக்கு வரும் முகவர்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி   வாக்கு எண்ணிக்கை அறைக்கு வரும் முகவர்கள், தங்களுடன் ஒரு பேப்பர், ஒரு பேனா, 17சி படிவம் மட்டுமே எடுத்து வர வேண்டும். ஸ்மார்ட் வாட்ச், மொபைல் போன், அனுமதிக்கப்படாது என்று திருச்சி  மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.