மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு

0 326
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 8  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் மரம் வெட்டும்போது காய்ந்த மரக்கிளை முறிந்து தொழிலாளி மீது விழுந்ததில் மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தவர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (45) . இவர் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 2 ந்தேதி பூனாம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஒரு காய்ந்த மரக்கிளை அவர் மீது விழுந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த்தில், படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.