‘நீட்’ தேர்வை ஒழித்துக்கட்ட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

0 339
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 8  கலைஞரை நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதுபோல தமிழக முழுவதும் இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தெற்கு மாவட்டம்,கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பில் தஞ்சாவூர் சாலையில் உள்ள வரகனேரி பகுதியில் கலைஞரின் நூலகம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கைகணினி, பத்து மற்றும் 12ம் வகுப்பின் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கும் வழங்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு கனணி மற்றும் 10, 12 ஆகிய வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஜோயல், , அப்துல் மாலிக் உட்பட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி :

முதல்வர் மட்டுமின்றி இந்தியா கூட்டணி தோழமை கட்சிகள் கூறும் விஷயம் Neet ஏழை மாணவர்களுக்கு எதிரான திட்டம் எனவே அதை ஒழித்துக் கட்ட வேண்டும்

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நீட் திட்டத்தை ஒழித்து காட்ட வேண்டும் என உறுதியுடன் உள்ளார்

நீட்டை பொறுத்தவரை ஸ்டாலின் என்ன கருத்து சொல்கிறாரோ அதை வழிமொழிகிறோம் என்றார்

Leave A Reply

Your email address will not be published.