கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

0 233
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மற்றும் கிழக்கு  தொகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து 10,12 ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கினார்.

கழக இளைஞரணி செயலாளர்  வேண்டுகோளுக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நூலகங்கள் திறக்கப்பட்டது

இந்நிகழ்வில்மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் பிரகாஷ், ஜோயல், இன்பா ஏ என் ரகு, அப்துல் மாலிக், பிரபு, இளையராஜா, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார் மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி தொகுதியில் எப்படி ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்கு கேட்டோமோ அதே போல் வெற்றி வேட்பாளருடன் மக்களுக்கு நன்றி தெரிவிக்க செல்வோம்.

இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை.. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர்.
நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம். என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.