மாநில அளவிலான சீனியர் தடகள போட்டியில் சி.வி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டு மொத்த சாம்பியன்

0 439
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10 திருச்சியில் நடந்த மாநில அளவிலான சீனியர் தடகள போட்டியில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றது. திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 7 ஆம் தேதி 96-வது மாநில அள விலான சீனியர் தடகள போட்டிகள் தொடங்கியது. 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின ருக்காக மொத்தம் 21 விதமான போட் டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் பல்வேறு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை குவித்தனர்.
இதில் குறிப்பாக ஆண்களுக்கான போல்வால்டில் சிவிபி அகாடமியை சேர்ந்த யுகேந்திரன் 5.16 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றதோடு புதிய சாதனை படைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற ஒட்டு மொத்தமாக அனைத்து போட்டிகளிலும் சிவிபி அகாடமி வீரர்கள் 11 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்ப தக்கமும், 8 வெண்கல பதக்கம் ஆக மொத்தம் 24 பதக்கங்கள் பெற்று புதிய சாதனையை படைத்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றனர். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரான சி.விஜய பாஸ்கர், திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்திற்கு நேரில் சென்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.