திருச்சி ஜூன் 14இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

0 515
Stalin trichy visit

திருச்சி ஜூன் 14இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

முகாமில் பல்வேறு தனியார் நிறுவனத்தினர் வந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களைத் தேர்வு செய்யவுள்ளனர். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் தொழிற்கல்வித் தகுதி உடையவர்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை இணையத்திலும் பதிவு செய்யலாம்.

முகாமில் திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு பதிவு ரத்தாகாது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இப் பணி முற்றிலும் இலவசமானது.

Leave A Reply

Your email address will not be published.