காணாமல் போன 98 செல்போன்கள் மீட்டு ஒப்படைப்பு

0 510
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 13 திருச்சி கே.கே நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்திலுள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 98 தொலைந்து போன செல்போன்களை மீட்டு அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில் திருச்சி மாநகரில் கடந்த 4 முதல் 5 மாதங்களில் பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருடு போன மற்றும் தொலைந்து போன 138 செல்போன்கள் ‘ட்ராக்’ செய்யப்பட்டு அவற்றில் 98 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநகரில் நடந்த வழிப்பறி கொள்ளைகளில் சம்பவங்களில் இது வரை 22 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை யடித்த சம்பவம் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றில் 10 வழக்குகளில் புலன் விசாரணை சீரிய முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து களவு போன பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாநகரில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 9 சோதனை சாவடிகளிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஒரு சோ தனை சாவடிக்கு இரண்டு என்ற வீதத்தில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் என்பது ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெககனைசிங் கேமராக்கள் என்பதாகும். இந்த தானியங்கி கேமராக்கள் காவல்கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சி கள் 20 நாட்கள் வரை அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதுமட்டுமல்லாமல் மாநகர பகுதிகளின் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் 860 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில், அவர்கள் வளாகத்தில் மட்டுமல்லாது வெளிப்புறங்களிலும் அதிக அளவிலான சிசிடிவி கேமராக்களை வைக்கும்படி வலியுறுத்தி வருகிறோம். அதோடு பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேம்ராக்கள் பொருத்தும்படி காவல்துறையினர் தரப்பில் இருந்து ஒரு பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். பொது மக்கள் ஒத்துழைப்பு இருந் தால் மட்டுமே மாநகரில் நடக்கும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க முடியும். எனவே பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, போலீசார் குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பேட்டியின் போது துணை ஆணையர்கள் செல்வகுமார், விவேகானந்தா சுக்லா மற்றும் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.