இருசக்கர வாகன பழுது நீக்குவோருக்கு அரசு பயிற்சி நிறுவனங்களை அமைத்து தர கோரிக்கை

0 217
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24  திருச்சி மண்டல இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழில் சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் 22 வது ஆண்டு பொதுக்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இருசக்கர வாகன பழுது நீக்குவோருக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் மாவட்டந்தோறும் அரசு சார்பில் பயிற்சி மேலும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பொருளாளர் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக அமைப்பு குழுத் தலைவர் அடைக்கலம் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.