சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 3 செயற்கை சுவாசக் கருவிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த அசோக் ராஜா ஏற்பாட்டில் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள மூன்று செயற்கை சுவாசக் கருவிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்,மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர்கள் செந்தில், விஎஸ்பி இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில, ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..